முக்கியச் செய்திகள் உலகம் விளையாட்டு

டி20 உலக கோப்பை தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு

உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் நாடுகளின் அணியின் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டது.

7வது டி20 உலக கோப்பைத் தொடர் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்த தொடரில் பங்கேற்கும் நாடுகளின், அணிகள் அறிவிக்க இன்றே கடைசி நாள்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் போன்ற நாடுகள் தங்கள் அணிகளை அறிவித்த நிலையில் உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டது. பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி ;

பாபர் அசாம் (கேப்டன்) , ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிப் அலி, ஹைதர் அலி, ஹரிஸ் ரவூப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, ஷான் மசூத், யுஸ்மான் காதர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் காத்திருப்பு வீரர்களின் பெயர்களில் பகர் ஜமான், முகமது ஹாரிஸ், ஷாநவாஸ் தஹானி பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

மேலும், காயத்தால் ஆசிய கோப்பை தொடரில் விளையாடாமல் இருந்த ஷஹீன் ஷா அப்ரிடின் பெயர் உலக கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆப்கன் கலவரத்திற்கு மத்தியில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்

Halley Karthik

“தேர்தல் தோல்விக்கு யார் காரணம்?”- அதிமுக, பாஜக பிரமுகர்கள் வார்த்தைப்போர்

EZHILARASAN D

கோவேக்ஸின் தடுப்பூசிக்கு இங்கிலாந்து அங்கீகாரம்

Halley Karthik