முக்கியச் செய்திகள் தமிழகம்

முத்துக்குமரனின் உடலில் பல இடங்களில் காயங்கள்-பிரேத பரிசோதனையில் தகவல்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் லட்சுமாங்குடி – கொரடாச்சேரியை சேர்ந்த முத்துக்குமரன் குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கடந்த ஒரு வாரமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு முத்துக்குமரனின் உடல் கொண்டுவரப்பட்டது.

முத்துக்குமரனின் உடலை வாங்குவதற்காக உறவினர்கள் மற்றும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருச்சி சர்வதேச விமானம் நிலையத்துக்கு வந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முத்துக்குமரனின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பது பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

முத்துக்குமரனின் உறவினர்கள் முன் வைக்கும் கோரிக்கைகள் :

முத்துக்குமரனின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த குவைத் முதலாளி மற்றும் அவரது மகன் உள்ளிட்டோர் மீது சட்டரீதியாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துக்குமரனின் மனைவி வித்யா BBA படித்துள்ளார். எனவே குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு அவருக்கு ஒரு அரசு வேலை வழங்க வேண்டும்.

மூன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் இரண்டு குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிதி உதவி வழங்க வேண்டும்.

முத்துக்குமரனின் உடல் திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த நிலையில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் மரியாதை செய்தனர்.

அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம்; நீதிமன்றம் அறிவுறுத்தல்

Halley Karthik

பின்னலாடை விலை 15 சதவீதம் உயர்வு

G SaravanaKumar

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்துவைக்கும் முதல்வர் பழனிசாமி!

Jeba Arul Robinson