டி-20 உலகக் கோப்பை தொடரில், பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில், சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக ஆடி வருகின்றன. குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பங்களாதேஷ் அணிகளும், குரூப்-2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா அணிகளும் இடம் பெற்றுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந் நிலையில் சூப்பர்-12 சுற்றில், இந்திய அணி, பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதற்கிடையே பங்களாதேஷ் – இலங்கை மோதும் மற்றொரு போட்டி சார்ஜாவில் இன்று 3.30 மணிக்குத் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதனால் மஹ்முதுல்லா தலைமையிலான பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இலங்கை அணி கடந்த 22 ஆம் தேதி இதே மைதானத்தில் நடந்த போட்டியில் நெதர்லாண்ட் அணியை எதிர்கொண்டது. அந்த அணியை துல்லியமான பந்துவீச்சால் வெறும் 44 ரன்களுக்கு சுருட்டியது. அதே மேஜிக்கை இன்றும் நடத்துவதற்காக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பங்களாதேஷ் அணி பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் வலுவாக உள்ளது. அந்த அணி 21 ஆம் தேதி பப்புவா நியூ கினியா அணியை 97 ரன்களில் சுருட்டியது.
இரு அணிகளுமே வெற்றிக்கு கடுமையாக போராடும் என்பதால் போட்டி பரபரப்பாக இருக்கும். பங்களாதேஷ் அணியில் முகமது நைமும் லிட்டன் தாஸும் களமிறங்கி ஆடி வருகின்றனர்.
அணி விவரம்:
பங்களாதேஷ்: மஹ்முதுல்லா(கேப்டன்), முகமது நைம், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹிம், , அபிஃப் ஹுசைன், நூருல் ஹசன், மஹதி ஹசன், முகமது சைஃபுதீன், நசும் அகமது, முஸ்தபிஜூர் ரஹ்மான்.
இலங்கை: தசுன் ஷனகா(கேப்டன்), குசல் பெரேரா, பதும் நிசாங்கா, சரித் அசலங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, பானுக ராஜபக்ச, , வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்னே, துஷ்மந்த சமீரா, பினுரா பெர்னாண்டோ, லஹிரு குமாரா.