தங்கம் விலையில் மாற்றம் – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனிடையே நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.175 குறைந்து ஒரு கிராம் ரூ.13,060-க்கும், சவரனுக்கு ரூ.1400 குறைந்து ரூ.1,04,480-க்கு விற்பனையானது. தொடர்ந்து 4 நாட்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,070-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,04,560-க்கு விற்பனையாகிறது.

நேற்று வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் வர்த்தகமான நிலையில், இன்று வெள்ளி விலை குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.220-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5000 குறைந்து ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.