முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதர் ஆலயத்தில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக விளங்கும் சுவாமிமலை சுவாமிநாதர் ஆலயத்தில் நடைபெறும் முக்கிய விழாவான சித்திரை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் 6 ஆம் நடைபெற உள்ளது.
கொடியேற்றத்தினை முன்னிட்டு சுவாமிநாத சுவாமி மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
கோ. சிவசங்கரன்







