முக்கியச் செய்திகள் தமிழகம்

“மத்திய அரசு தேர்வில் தமிழ் புறக்கணிப்பு”

மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான மத்திய அரசின் ஆன்லைன் திறனறிவு தேர்வில், தமிழ்மொழி புறக்கணிப்பட்டுள்ளது ஏன்? என எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசின் KVPY எனும் அறிவியல் மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு, ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இந்த திறனறிவு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.80,000 முதல் ரூ.1,12,000 வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்திட வேண்டும் என மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங்-கிற்கு, மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அதில் அறிவியல் மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் எனவும் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

கிராமப்புறங்களில் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு – அமைச்சர்

Halley karthi

“திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்” : டி.ராஜா

Halley karthi

தங்கத்தமிழ் செல்வன் மீது கூடலூர் நகர செயலாளர் புகார்!

Niruban Chakkaaravarthi