சொத்து வரி செலுத்தாமல் ஏமாற்றியவர்களின் விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், இணைய தளத்திலும் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் சொத்து வரி செலுத்தும்படி, தட்டான்குட்டை கிராம பஞ்சாயத்து சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதை எதிர்த்து நாமக்கல் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, அதிக கட்டணம் வசூலித்து வணிக நோக்கில் செயல்படும் கல்வி நிறுவனங்கள் வரி செலுத்த தயங்குவதாக நீதிபதி குறிப்பிட்டார். சொத்து வரி மதிப்பீடு, வரி வசூல் போன்ற நடவடிக்கைகளில் மெத்தனப்போக்கு, ஊழல்களில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்,
சொத்து வரி செலுத்தாமல் ஏமாற்றியவர்களின் விவரங்கள், வரி பாக்கி விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், இணைய தளத்திலும் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார். அனைத்து மாவட்டங்களிலும், ஆட்சியர் தலைமையில் வரிவிதிப்பு குழுவை அமைக்கும்படி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.