நடிகர் சூர்யாவின் பிறந்தநாளான இன்று ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் ஜெய்பீம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதில் சிறப்பு கதாபாத்திரத்தில் சூர்ய நடிக்கிறார்.
நடிகர் சூர்யா தனது 46வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகின்ற நிலையில், அவரது நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சூர்யா சிறப்பு காதாபாத்திரத்தில் நடிக்கும் ஜெய்பீம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த படத்தை 2டி என்டர்டெய்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. சூர்யாவின் இந்த 39வது திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தை எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். கர்ணன் திரைப்படத்தில் நாயகியாக நடித்த ரஜிஷா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் சூர்யா வழக்கறிஞராக உள்ளார். இந்த படத்தின் இயக்குநர் ஞானவேல் முன்னதாக ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








