பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கிய சர்வே உதவி ஆய்வாளர் கைது!

மதுரையில் பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கிய சர்வே உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். மதுரை அருகே மாடக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்.  இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது…

மதுரையில் பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கிய சர்வே உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

மதுரை அருகே மாடக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்.  இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரண்யாவுக்கு அவரது தாயார் வழங்கிய நிலத்திற்கு பட்டா கேட்டு திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

3 மாதக் காலமாக நடவடிக்கை இல்லாதக் காரணத்தினால் சர்வே உதவி ஆய்வாளர் பிரேம்குமாரை அணுகிய போது,  ரூ.14,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர், நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இது குறித்து, லஞ்சஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சத்தியசீலனிடம் கிருஷ்ணன் புகார் செய்துள்ளார்.  போலீசார் அறிவுரையின்படி,  வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கிருஷ்ணன் சென்ற போது,  பிரேம்குமார் அங்கு இல்லை.  அலைபேசியில் கிருஷ்ணன்
தொடர்பு கொண்ட போது,  அழகப்பன் நகர் பீல்டிற்கு வந்துள்ளதால் அங்கு வருமாறு கூறியுள்ளார். அங்கு சென்ற கிருஷ்ணனிடம், கிருஷ்ணன் லஞ்சப் பணத்தைக் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.

ரா. கௌரி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.