திருமணமான 4 மாதங்களில் வாடகைத் தாய் மூலம் நயன்தாரா இரட்டை குழந்தை பெற்றெடுத்ததாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ஷாருக்கான், அமீர் கான் , பிரியங்கா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களும் வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றவர்களைப் பற்றி பார்ப்போம்…
நடிகர் விஜயின் தமிழன் படித்தில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இவரும் இவருடைய வெளிநாட்டு கணவரான நிக் ஜொனாஸ் , தங்கள் முதல் குழந்தையை வாடகைத் தாய் மூலம் 2022ல் பெற்றெடுத்தனர். மால்தி என்று தங்கள் பெண் குழந்தைக்கு அவர்கள் பெயரிட்டுள்ளனர். குழந்தை பிறந்த தகவலை , அந்த குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு பிறகே அவர்கள் அறிவித்தனர்.
அண்மைச் செய்தி :
நயன்தாராவின் இரட்டை குழந்தை: வாடகைத் தாய் குழந்தை பற்றி சட்டம் சொல்வது என்ன?
பாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் ஸ்டாரான அமீர் கான் – கிரண் ராவ் தம்பதி, 2011ல் தங்களுடைய மகனான ஆசாத் ராவ் கானை வாடகைத் தாய் மூலம் பெற்றனர். இதற்கு காரணம் அமீர் கானின் மனைவி கிரண் ராவ் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதே. அமீர் கானுக்கு ஏற்கனவே முன்னாள் மனைவி ரீனா மூலமாக ஜூனைத், ஐரா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன. 
பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் – கவுரி கான் தம்பதி, 2013ல் , தங்களுடைய மகனான ஆப்ராமை பெற்றது வாடகைத் தாய் மூலம் தான். ஷாருக் கான் – கவுரி தம்பதிக்கு ஏற்கனவே ஆர்யான் கான், சுஹானா கான் என்று இரண்டு குழந்தைகள் உள்ளன.
பாலிவுட்டின் கவர்ச்சிக் கன்னி சன்னி லியோன் – டேனியல் வெப்பர் ஜோடி, 2017ல் ஆஷர் , நோவா என்ற இரண்டு குழந்தைகளை வாடகைத் தாய் மூலம் பெற்றனர்.
தமிழ், இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஷில்பா ஷெட்டி – ராஜ்குந்த்ரா தம்பதி, 2020ல் தங்களுடைய இரண்டாவது குழந்தையான சமிக்ஷாவை வாடகைத் தாயின் மூலம் பெற்றெடுத்தனர். ஷில்பா ஷெட்டிக்கு வியான் என்ற மகனும் இருக்கிறார்.
இந்தியின் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரீத்தி ஜிந்தா – ஜெனி குட்எனஃப் தம்பதி, 2021ம் ஆண்டு, இரண்டு குழந்தைகளை வாடகைத் தாய் மூலம் பெற்றனர். இந்த தம்பதி 2017ம் ஆண்டு நிஷா கவுர் வெப்பர் என்ற குழந்தையை 2017ல் தத்தெடுத்தது.
2011ல் நடிகர் சோஹைல் கான் – சீமா கான் ஆகியோர் தங்களுடைய இரண்டாவது குழந்தையான யோஹனை வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்தனர்.
திருமணம் செய்து கொள்ளாத பாலிவுட் இயக்குநர் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர், இரட்டையர்களை வாடகைத் தாய் மூலம் பெற்று வளர்த்து வருகிறார். இவர்கள் மட்டுமல்ல, சஞ்சய் தத், லிசா ரே உள்ளிட்டோரும் இதுபோல் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளனர்.
-ஜெயகார்த்தி







