முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்.14ல் அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற அக்-17-ந்தேதி நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். இதையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு…

தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற அக்-17-ந்தேதி நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். இதையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 14ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சரவை கூட்டம் வரும் 14ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. சட்டசபை கூட்டம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும். சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17-ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்படும்.

அதன்பின், அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாள் சட்டபேரவை கூட்டம் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும். எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சி துணைத்தலைவர் கடிதங்கள் பரீசிலனையில் உள்ளது. சபை மரபுப்படி முடிவு எடுக்கப்படும். சட்டப்பேரவை தொடர் விரைவில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.