குஜராத்தில் தனது விந்தணு மூலம் பிறக்கபோகும் குழந்தைக்கு தாயாக திருநங்கை மருத்துவர் ஒருவர் காத்திருக்கும் நிகழ்வு அம்மாநில மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள கோத்ரா பகுதியில் பிறந்தவர் ஜெஸ்னோர் டயாரா. சிறுவயது முதலே மருத்துவராக வேண்டுமென ஆர்வம் கொண்ட டயாரா ரஷ்யாவிற்கு சென்று எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றுள்ளார். ரஷ்யாவிற்கு சென்று தனது சிறுவயது கனவை மட்டுமல்லாமல் சிறுவயது முதல் தான் அடைப்பட்டிருந்த கூண்டிலிருந்தும் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதாவது ஜெஸ்னோர் டயாரா, அவருடைய சிறுவயதிலேயே அவரது உடல் ஆணாகவும், பெண்ணிற்குரிய மனதையும் கொண்டிருப்பதை உணர்ந்தார். ஆனால் பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பயந்து தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்தமால் இருந்தார். இந்நிலையில் எம்.பி.பி.எஸ். படிப்பதற்காக ரஷ்யா சென்றபோது திருநங்கையாக மாறுவதற்கும் முடிவெடுத்துள்ளார். மேலும் திருநங்கையாக மாறுவதற்கு முன்னர் தன்னுடைய உயிரணுவான விந்துக்களை சேகரித்து தகுந்த பாதுகாப்புடன் குழந்தை கருத்தரிப்பு மையத்தில் சேகரித்து வைத்துள்ளார். அந்த விந்தணுக்களை வாடகைத்தாய் மூலம் குழந்தையாக பெற்றெடுத்து தாயாக வேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2020ம் ஆண்டு மருத்துவப்படிப்பை முடித்த அவர், அறுவை சிகிச்சையின் மூலம் திருநங்கையாகவும் மாறினார். அவருடைய பெற்றோர் முதலில் இதை எதிர்த்தாலும், பின்னர் அவரை முழு மனதோடு ஏற்றுக்கொண்டனர்.

ஆனால் இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது சட்டப்பூர்வமானது எனினும் LGBTQ – பிரிவைச் சேர்ந்தவர்களும், திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வசிப்பவர்களும், தனியாக இருக்கும் ஆண்களும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி இல்லை. இதுகுறித்து ஜெஸ்னோர் டயாரா கூறும்போது, ஒரு நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் விருப்பமும் நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.