சென்னை மற்றும் கோவா உள்ளிட்ட இடங்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
சில வாரங்களாக சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணி பற்றிதான் கோலிவுட் முழுக்க பேச்சாக இருந்தது. அண்ணாத்த படத்தை இயக்கிய இயக்குநர் சிறுத்தை சிவா, சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்த நிலையில் சில காரணங்களால் இப்படம் தள்ளிப்போனது. படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் இருந்த நிலையில் அதற்குப் பதில் அளிக்கும் விதமாக நேற்று (ஆகஸ்ட் 22) சூர்யா -சிறுத்தை சிவா படத்தின் பூஜை நடைபெற்றது.
இயக்குனர் சிறுத்தை சிவாவின் கனவுப் படம் எனக் கூறப்படும் இப்படம் 2 பாகங்களாகவும் 10 மொழிகளில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.சென்னை மற்றும் கோவா உள்ளிட்ட இடங்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பை நடைபெறவுள்ளது. இப்படத்தை யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தில் முதல் முறையாக சூர்யாவுக்கு ஜோடியாக இந்தி நடிகை திஷா பதானி நடிக்க இருக்கிறார். இசையமைப்பாள தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.







