நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக பாஜக-வில் இருந்து அங்கு சென்ற அர்ஜூனமூர்த்தி மீண்டும் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அறிவித்திருந்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கொரோனா காரணமாக அவர் கட்சி அறிவிப்பு, அறிவிப்பாக மட்டுமே நின்று விட்டது. இதனிடையே எப்போது கட்சி தொடங்குவது என்பது குறித்து தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜனிகாந்த் ஆலோசனை நடத்தி வந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், டிசம்பர் 31-ம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் ட்விட்டரில் அறிவித்திருந்தார். பின்னர் போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூனா மூர்த்தியை தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளதாக தெரிவித்தார்.
பாஜகவின் அறிவுசார்பிரிவின் தலைவராக இருக்கும் அர்ஜூன மூர்த்தி ரஜினிகாந்தின் நம்பிக்கைக்குரியவராக மாறினார். பின்னர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்ற அறிவிப்புக்கு பின்னர் அர்ஜூன மூர்த்தி இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியை தொடங்கி அதற்கென தனி கொடியையும் அறிமுகப்படுத்தினார். இதையடுத்து, பாஜகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், அர்ஜூனமூர்த்தி மீண்டும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று பிற்பகல் 1 மணிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அவர் மீண்டும் தன்னை பாஜகவில் இணைத்து கொள்ள உள்ளார்.
– இரா.நம்பிராஜன்