முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

சூர்யாவின் ’வாடிவாசல்’ ஷூட்டிங் எப்போது?

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

தனுஷ், மஞ்சு வாரியர் நடித்த ’அசுரன்’படத்தை இயக்கிய வெற்றிமாறன், அடுத்து சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ படத்தை இயக்குவதாக இருந்தது. சி.சு.செல்லப்பாவின் நாவலான இதன் கதை ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டது. படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இதற்கிடையே, பாண்டிராஜ் இயக்கும் படத்தை முடித்துவிட்டு, ’வாடிவாசல்’ படத்தில் நடிக்க சூர்யா முடிவு செய்தார்.

அதோடு, இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு படம் இயக்கிக் கொடுப்பதற்காக சில வருடங் களுக்கு முன் அட்வான்ஸ் வாங்கியிருந்தார். அவர், தனக்கு முதலில் படம் இயக்கித் தருமாறு கேட்டதை அடுத்து, ’வாடிவாசலு’க்கு முன் சூரி நடிக்கும் ’விடுதலை’ படத்தை இயக்க முடிவு செய்தார்.

போலீஸ்காரராக சூரி நடிக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நக்சலைட்டாக நடிக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் ’வாடிவாசல்’ படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகி உள்ளது.

Advertisement:

Related posts

கூடலூரில் 3 வருடங்களாக காயத்துடன் அலைந்த யானைக்கு சிகிச்சை!

Gayathri Venkatesan

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி: 2 பேர் உயிரிழப்பு

Halley karthi

கொதிக்கும் எண்ணையை பசு மேல் ஊற்றிய கொடூரம் !

Vandhana