முக்கியச் செய்திகள் குற்றம்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவன் கைது

சேலம் மாவட்டம் ஆத்தூரில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவனை அடித்து உதைத்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் வசித்து வரும் கூலித்தொழிலாளியின் 5 வயது மகள் சம்பவத்தன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அதே பகுதியில் புதிதாக குடி வந்திருக்கும் சேலத்தை சேர்ந்த 15 வயது சிறுவன், சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பயந்துபோன சிறுமி கத்தி கூச்சலிடவே, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு விசாரித்துள்ளனர்.

அப்போது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை சராமாரியாக தாக்கிய பொதுமக்கள் ஆத்தூர் நகர போலீசாரிடம் ஒப்படைத்தனர். சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Related posts

விமான நிலையத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!

Gayathri Venkatesan

மகாராஷ்டிராவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Halley karthi

அதிகரிக்கும் கொரோனா; தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்!

Ezhilarasan