புனித் ராஜ்குமாரின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் புனித் ராஜ்குமார் (46). இவர் சில நாட்களுக்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர் மரணம் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்திய திரை உலகினருக்கும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் உட்பட பலர் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர் .
பெங்களூரு கன்டீரவாவில் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் நினைவிடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தினார். இந்நிலை யில் நடிகர் சூர்யா, அவர் நினைவிடத்தில் கண்ணீர் மல்க இன்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூர்யா, “இப்படி நடந்திருக்கவே கூடாது. எங்கள் இருவர் குடும்பமும் நெருக்கமான நண்பர்களாக இருந்தோம். என் அம்மா வயிற் றில் நான் 4 மாதக் குழந்தையாக இருந்தபோது புனித் அவர் அம்மா வயிற்றில் 7 மாதக் குழந்தையாக இருந்தார் என்று எனக்கு என் அம்மா சொன்னது நினைவில் இருக்கிறது. புனித்துக்கு இப்படி நடந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சமூகத்துக்கு அவர் செய்த அற்புதமான விஷயங்களை கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் குடும்பத்தினர், நலம் விரும்பிகளுக்கு ஆறுதலையும், இதைத் தாங்கும் மன உறுதியும் தரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்’ என்றார்.









