முக்கியச் செய்திகள் தமிழகம்

8-வது மெகா தடுப்பூசி முகாம் தேதி மாற்றம்

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போடும் பணி தொடங்கிய முதல் 9 மாதங்களில் 100 கோடி ‘டோஸ்’ தடுப் பூசி போடப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மிக விரைவாக நடைபெற்று வருகிறது. அதிக பேருக்கு தடுப்பூசி போட வசதியாக மாவட்டங்களில் பல இடங்களில் கூடுதலாக மையங்கள் அமைத்து மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற 7 சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் 1 கோடியே 51 லட்சத்து 13 ஆயிரத்து 382 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை 8-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற இருந்தது.

அதில், சுமார் 50 ஆயிரம் முகாம்கள் மூலம் தடுப்பூசி போடும் பணி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படிருந்தது. 2-வது தவணை ‘கோவேக்சின்’ தடுப்பூசி 13 லட்சம் பேருக்கும், ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி 48 லட்சம் பேருக்கும் செலுத்தப்பட உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 8-வது மெகா தடுப்பூசி முகாம் தேதி மாற்றப்படுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

தொடர் மழை: ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு

Halley Karthik

தஞ்சையை சிறந்த சுற்றுலா தலமாக உருவாக்க நடவடிக்கை: நீலமேகம்

Saravana Kumar

உறவினர்களுடன் வீடியோகால் பேச முருகன், நளினிக்கு அனுமதி!

Halley Karthik