நிவின் பாலியுடன் இணைந்து நடிக்கும் சூரி

நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தில் இணைந்திருக்கிறார் நடிகர் சூரி. கடந்த 2018-ஆம் ஆண்டு ‘பேரன்பு’ படம் வெளியாகி பெரும் பாராட்டுக்களைக் பெற்றது. அப்படத்தை, இயக்குநர் ராம் இயக்கி இருந்தார். அப்படத்தில் மம்மூட்டி, அஞ்சலி,…

நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தில் இணைந்திருக்கிறார் நடிகர் சூரி.

கடந்த 2018-ஆம் ஆண்டு ‘பேரன்பு’ படம் வெளியாகி பெரும் பாராட்டுக்களைக் பெற்றது. அப்படத்தை, இயக்குநர் ராம் இயக்கி இருந்தார். அப்படத்தில் மம்மூட்டி, அஞ்சலி, சாதனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய ராம், மிஷ்கின் இயக்கிய ‘சைக்கோ’ படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது, நிவின் பாலி, அஞ்சலி இணையும் புதிய படத்தினை இயக்குநர் ராம் இயக்கி வருகிறார். இப்படத்தை சுரேஷ் கமாட்சி தயாரிக்கிறார், கடந்த ஆண்டு இதன் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் துவங்கியது. தொடர்ந்து தற்போது நடக்கும் படப்பிடிப்பில் நடிகர் சூரி இன்று இணைந்துள்ளார்.

நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று இனியதொரு தொடக்கம். இயக்குநர் அண்ணன் ராம் மற்றும் பிரதர் நிவின் பாலியுடன் முதல்முறையாக ‘பயணிப்பதில்’ பெரு மகிழ்ச்சி. அண்ணன் சுரேஷ் காமாட்சிக்கு நன்றி என்று, அவர்களுடன் உள்ள புகைப்படங்களைப் பர்கிந்துள்ளார். நடிகர் சூரியின் டிவிட்டர் பதிவை தொடர்ந்து, பல முக்கிய திரை பிரபலங்கள் அதே பதிவை ரீடிவிட் செய்தும், டிவிட் செய்தும் தங்கள் வாழ்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.