நிதியமைச்சருக்கு நன்றி தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் பட்ஜெட் என்று எதிர்கட்சிதலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் நதி இணைப்புத் திட்டங்களுக்கு…

நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் பட்ஜெட் என்று எதிர்கட்சிதலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் நதி இணைப்புத் திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், ரூ.44,000 கோடி ஒதுக்கீடு செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றியினை தெரிவித்துகொள்வதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 9 ஆண்டுகளாக  தொடர்ந்து வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வருமான வரி உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள நதிநீர் இணைப்பு, விவசாயத் துறைக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான நிதி ஒதுக்கீடு, மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, நெஞ்சாலைத் துறை, 5ஜி சேவை, 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் போன்ற அம்சங்கள் நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்லும் என்றும் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதிமுக சார்பில் பிரதமர் மோடிக்கும், பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாரமனுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.