முக்கியச் செய்திகள் விளையாட்டு

அரையிறுதிக்கு செல்கிறது நியூசிலாந்து; வாய்ப்பை இழந்தது இந்தியா

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சூப்பர்-12’ சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது, தொடர்ந்து விளையாடிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை எடுத்தது.

பின்னர் கள இறங்கிய நியூசிலாந்து அணி, 18 புள்ளி ஒரு ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 125 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. நியூசிலாந்து அணியின் வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை முற்றிலுமாக இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

இலங்கை சென்றது இந்திய கிரிக்கெட் அணி

Vandhana

நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு

Vandhana

சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கியது போக்சோ சிறப்பு நீதிமன்றம்

Saravana Kumar