இணையதள மோசடி வழக்கில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “சைபர் குற்றங்களை செய்பவருக்கு எதிராக குண்டர் சட்டத்தை தமிழ்நாடு அரசு பயன்படுத்தி வருகிறது. இதுபோன்ற குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கமான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்வது பலனளிக்கவில்லை” என்று கருத்து தெரிவித்தது.
அத்துடன் இணையதள மோசடி வழக்குகளில் குண்டர் சட்டத்தை தமிழ்நாடு அரசு பயன்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது என பாராட்டு தெரிவித்தது. மேலும் இந்த மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளை(ஜூன்.25) மறுதினத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.








