தேவையில்லாத மேல்முறையீட்டு வழக்கு-தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அபராதம்

தேவையில்லாத மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்ததற்காக தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் சிலருக்கு பென்ஷன் வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக…

தேவையில்லாத மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்ததற்காக தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் சிலருக்கு பென்ஷன் வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, “ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட விவகாரத்தில், இத்தகைய மனுவை அரசு தாக்கல் செய்திருக்கக் கூடாது. ஒரு பென்ஷன் விவகாரத்தில் நீதிமன்றம் வரை விவகாரம் வந்து அது நிறைவடைந்துவிட்ட போதிலும் மீண்டும் சம்பந்தப்பட்ட மனுதாரர் ஓய்வூதியத்திற்கு தகுதியற்றவர் என அரசு வாதிடுகிறது. இது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல” எனக் கூறி 5 லட்ச ரூபாய் அபராதத்துடன் மனுவைத் தள்ளபடி செய்து உத்தரவிட்டனர்.

4 வாரத்தில் அபராத தொகையை உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில செலுத்த வேண்டுமென உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.