உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளாக நான்கு நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றக் கொலீஜியம் பரிந்துரை!

உச்ச நீதிமன்ற கொலீஜியம், நான்கு நீதிபதிகளைப் பல்வேறு உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக நியமிக்குமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

​உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியம், பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்கு நான்கு நீதிபதிகளை தலைமை நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

​நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோரைஉள்ளடக்கிய இந்தக் கொலீஜியம், அக்டோபர் 26 அன்று நடத்திய கூட்டத்தில், தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி பி. சாம் கோஷியை டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரைத்தது.

​தற்போது குஜராத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதி மானஷ் ரஞ்சன் பதாக், அதே குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
​மேலும், கொலீஜியம் கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி தபப்ரதா சக்ரவர்த்தியை தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.