சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 நிரந்தர நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 நிரந்தர நீதிபதிகள் நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக  ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சௌந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு ஆகியோர் உள்ளனர். இந்த…

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 நிரந்தர நீதிபதிகள் நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக  ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சௌந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு ஆகியோர் உள்ளனர். இந்த நீதிபதிகளை  நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை -கொலிஜியம் பரிந்துரையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிஷான் கவுல், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் தலைமையிலான உச்சநீதிமன்ற கொலிஜியம் இந்த பரிந்துரையை செய்துள்ளது.

கொலிஜியம் பரிந்துரைத்த பட்டியலை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் நீதிபதிகளான  ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சௌந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்படுவார்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.