கன்வர் யாத்திரைக்கு அளித்த அனுமதியை மறு பரிசீலினை செய்ய உத்தரவு

கன்வர் யாத்திரைக்கு அளித்த அனுமதியை உத்தரப் பிரதேச அரசு மறு பரிசீலினை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  கன்வர் யாத்திரைக்கு உத்தரப் பிரதேச அரசு அனுமதி அளித்ததையடுத்து, உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து பதிவு…

கன்வர் யாத்திரைக்கு அளித்த அனுமதியை உத்தரப் பிரதேச அரசு மறு பரிசீலினை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கன்வர் யாத்திரைக்கு உத்தரப் பிரதேச அரசு அனுமதி அளித்ததையடுத்து, உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு,  நீதிபதி ஆர்.எஃப். நரிமன் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு வாதத்தில், குறிப்பிட்ட இடங்களில் கங்கை நீர் டேங்கர்களில் கிடைக்கும்படி மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் வாயிலாக கங்கை நீரை கொண்டு அருகிலுள்ள சிவன் கோயிலில் பக்தர்கள் அபிஷேகம் செய்ய முடியும்

உத்தரப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், குறைந்த பக்தர்களை கொண்டு கன்வர் யாத்திரையை அடையாள நிமித்தமாக நடத்த விரும்புகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைக் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், கன்வர் யாத்திரையை எந்த மாநிலத்திலும் அனுமதிக்க முடியாது என மத்திய அரசு எடுத்துள்ள நிலைப்பாடு காரணமாக உத்தரப் பிரதேசத்திலும் யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் கன்வர் யாத்திரைக்கு அளித்த அனுமதியை மறு பரிசீலிக்க வேண்டும், இல்லையென்றால் உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் எனக் கூறிய நீதிபதிகள், கொரோனா பெருந்தொற்று அனைவரையும் பாதித்து வருகிறது. அதனால்தான் இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரிக்கிறோம் எனத் தெரிவித்து வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.