திரைப்படங்கள் ஓ.டி.டியில் வெளியாவதால் இசைத் தரம் குறைவதில்லை என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஸ்டுடியோ திறப்பு விழா ஒன்றில் பேசியுள்ளார்.
சென்னை வட பழனியில் சவுண்டபுள் என்ற ஆடியோ ரெக்காடிங் ஸ்டுடியோ திறப்பு விழாவில் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்துகொண்டு பேசினார்.
கொரோனா காலத்தில், இசை , சினிமா இரண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், தான் இசை கலைஞர்களை சந்தித்து பேசி ஆய்வு செய்ததில், இசை கலைஞர்களுக்கு வழங்கப்படும் பண உதவியும் பொருள் உதவியும் அவர்களை மன அளவில் பாதிப்பதாகவும் வேலை வாய்ப்புகளையே அவர்கள் விரும்புவதாகவும் கூறினார்.
கொரோனா காலத்தில் பெரும்பாலான படங்கள் ஓ.டி.டியில் வெளியாகிறதாகவும், இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது என்பது நல்ல விசியம் என்றார். தற்போது சுயாதீன இசை (independent music) மிகப் பெரிய அலையாக உருவாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் திரைப்படங்கள் ஓ.டி.டி தளத்தில் வெளியாவதால், அதில் வரும் இசையின் தரம் குறைவதாக தான் கருதவில்லை என்றவர், இசைக்கு உயிரோட்டமே முக்கியம் என்றும் அதை திரையரங்கில் பார்க்கும் போது கூடுதல் பலமே தவிரே, திரையரங்கில் பார்த்தால் மட்டுமே தரமான இசை வெளிப்படும் என்பதை தான் மறுப்பதாகவும் தெரிவித்தார்.
Advertisement: