முக்கியச் செய்திகள் தமிழகம்

3ம் அலையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது: அமைச்சர் மூர்த்தி 

3ம் அலையை எதிர் கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என மதுரையில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். 
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி,  மூன்றாம் அலையை எதிர் கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது, மூன்றாம் அலை மதுரையை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். 3ஆம் அலைக்கு தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் மற்றும் படுக்கை தட்டுப்பாடு  இல்லாதவாறு அனைத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
நீட் விவகாரத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி  மத்திய அரசிடம்  அனுமதி வாங்க முடியாத நிலையில் தற்போது குறை கூறுவது நியாயமா என்று  அதிமுகவுக்கு கேள்வி எழுப்பிய அவர்,  “வணிக நல வாரியங்கள் அமைப்பதற்கு முதலமைச்சர்  அறிவுறுத்தியுள்ளார்.  ஊழலில் மொத்த உருவமாக  பத்திரப்பதிவுத் துறை  இருந்துள்ளது, 2 மாதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கோவையில் 60% வரை கொரோனா தொற்று குறைந்துள்ளது – அமைச்சர் கே.என்.நேரு

Jeba Arul Robinson

உணர்வுகளுடன் கூடிய ரோபோவை உருவாக்கி சென்னை பள்ளி மாணவர் அசத்தல்

Web Editor

5 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை உயர்வு: தமிழ்நாடு அரசு

Arivazhagan Chinnasamy