வகுப்புகளில் மாணவர்களை சேரச் சொல்லி மிரட்டுவதாக புகார்: பைஜூஸ் நிறுவன சிஇஓக்கு சம்மன்

மாணவர்களை தாங்கள் எடுக்கும் ஆன்லைன் வகுப்புகளில் சேரச்சொல்லி பைஜூஸ் நிறுவனம் மிரட்டுவதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக விளக்கமளிக்க அந்நிறுவனத்தின் சிஇஓ ரவீந்திரனுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. செல்போன் செயலி…

மாணவர்களை தாங்கள் எடுக்கும் ஆன்லைன் வகுப்புகளில் சேரச்சொல்லி பைஜூஸ் நிறுவனம் மிரட்டுவதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக விளக்கமளிக்க அந்நிறுவனத்தின் சிஇஓ ரவீந்திரனுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

செல்போன் செயலி மூலம், ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வரும் நிறுவனம் பைஜூஸ்.  பல்வேறுவிதமான போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள ஏராளமான பயிற்சி வகுப்புகளை இந் நிறுவனம் ஆன்லைன் மூலம் நடத்தி வருகிறது.

இந்த நிறுவனம் குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியன்ங் கனூன்கோ தெரிவித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ”குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோரின் செல்போன் நம்பர்களை பெற்று அவர்களை இடைவிடாது பின் தொடர்ந்து பயிற்சி வகுப்புகளில் சேரச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். பயிற்சி வகுப்புகளில் சேரவில்லை என்றால் குழந்தைகளின் எதிர்காலம் நாசமாகிவிடும் என்று பயமுறுத்துகிறார்கள் என எங்களுக்கு புகார் வருகிறது” என பிரியன்ங் கனூன்கோ கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணையை தொடங்கிவிட்டதாகவும் தேவைப்பட்டால் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்பிப்போம் எனவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வரும் 23ந்தேதி நேரில் ஆஜராகுமாறு பைஜூஸ் தலைமை செயல் அதிகாரி ரவீந்திரனுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.