ராகுல் காந்தி நடைபயணத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கபட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரானா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா பாதித்தவரின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் எனவும், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் நேற்று கடிதம் எழுதியிருந்தார்.
இந்தநிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் இன்று மதியம் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. டெல்லியில் நடந்த கூட்டத்தில் உயர் அதிகாரிகள், நிபுணர்களுடன் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 3 ராஜஸ்தான் எம்.பி.க்கள் எனக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதில், காங்கிரஸின் இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்பாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த யாத்திரையில் கலந்து கொண்ட பிறகு ஹிமாச்சல பிரதேச முதல்வருக்கும் கொரோனா தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்த நடைபயணத்தை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்த வேண்டும் எனவும், தடுப்பூசி போட்டவர்களே இதில் பங்கேற்க வேண்டும் எனவும், இல்லையென்றால் தற்காலிகமாக இதனை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.