முக்கியச் செய்திகள் தமிழகம்

கோடை விடுமுறை; மாணவர்களுக்கு அமைச்சர் அட்வைஸ்

கோடை விடுமுறையில் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாளை தொடங்குகிறது. ஜூன் 12 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நிலையில், கோடை விடுமுறை நாட்களில் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விடுமுறையில் நீர்நிலைகளுக்கு செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும், ஆன்லைன் விளையாட்டுகள் தவிர உடலுக்கு உரிய பயிற்சியை வழங்கும் நேரடி விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் கவனம் செலுத்திட வேண்டும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர், தங்கள் குழந்தைகளுக்கு எதில் ஆர்வம் மற்றும் திறமை இருக்கிறது என்பதை பெற்றோர்கள் அடையாளம் காணும் விடுமுறையாக இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் பள்ளிகள் வரும் ஜூன் 13-ம் தேதி திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

கோவையில் கணவன் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை

Ezhilarasan

மகளின் திருமண செலவுக்கு பணம் இல்லாததால், தற்கொலை செய்து கொண்ட தாய்!

Niruban Chakkaaravarthi

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

Arivazhagan CM