முக்கியச் செய்திகள் இந்தியா

தேசிய நெடுஞ்சாலையில் விமானங்கள் தரையிறங்கும் வசதி தொடக்கம்

ராஜஸ்தானில், தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படை விமானங்கள் அவசரமாக தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் பார்மரில் உள்ள காந்தவ் பகசார் பிரிவு, தேசிய நெடுஞ்சாலையில் இந்திய விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அவசரமாக தரையிறங்கும் வகையில் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது.

விமானங்கள் தரையிறங்கும் நிகழ்வை, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். ராஜஸ்தானின் சர்வதேச எல்லையில் அமைந் துள்ள பார்மர் மற்றும் ஜாலூர் மாவட்ட கிராமங்களுக்கிடையேயான தொடர்பை இத்தகைய வசதி மேம்படுத்தும் என கூறப்படுகிறது.

மேலும், எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினருக்கு இந்த புதிய வசதி உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

 

 

Advertisement:
SHARE

Related posts

நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜன.31 வரை நீட்டிப்பு – மத்திய அரசு

Saravana

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து; இந்தியாவிற்கு பாகிஸ்தான் நிபந்தனை!

Halley karthi

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.68 லட்சம்

Ezhilarasan