திமுகவின் ஆட்சி சிறப்பாக செயல்படுவதாக மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம் வீரப்பன் பாராட்டியுள்ளார்.
தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் தீவிர விசுவாசியான ஆர்.எம்.வீரப்பன்
சட்டமேலவை உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள் ளார். நீண்ட அரசியல் பாரம்பரியம் கொண்ட ஆர் எம் வீரப்பனின் 95வது பிறந்தநாள் இன்று
கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க
ஸ்டாலின் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது திமுக நாடாளு மன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர்.
அது தொடர்ந்து அவரது இல்லத்திற்கு திமுக பொதுச்செயலாளரும் தமிழக அமைச்சருமான
துரைமுருகன் வருகை தந்து நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தி யாளர்களை சந்தித்த ஆர்.எம். வீரப்பன், திமுகவின் ஆட்சி சிறப்பாக செயல்படுவதாக பாராட்டினார்.







