காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட உயிரிழப்பு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கர வாதி, இந்தியாவில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டவர் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதும் தலிபான் கள் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து அந்த நாட்டில் இருந்த தங்கள் நாட்டு மக்களை மீட்கும் பணியில் அனைத்து நாடுகளும் ஈடுபட்டன. அமெரிக்க படைகள், மக்களை பத்திர மாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டது. இதில் அந்தந்த நாட்டு மக்களுடன், தலிபான் களுக்கு பயந்து ஏராளமான ஆப்கானிஸ்தானியர்களும் வெளிநாடுகளுக்குத் தப்பி சென் றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால், கடந்த மாதம் ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையம் மக்களால் நிரம்பி வழிந்தது. விமான நிலையத்துக்குள் நுழைய முடியாமல் ஏராளமானவர்கள் காத்துக் கிடந் தனர். அங்கு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை செய்தி ருந்த நிலையில் அடுத்தடுத்து 2 உயிரிழப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த 13 பேர் உட்பட 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கோரசான் பிரிவு பொறுப்பேற்றது. இந்நிலையில் இந்த உயிரிழப்பு தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர், ஐந்து வருடத்துக்கு முன் இந்தியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதை ஐஎஸ் அமைப் பின் கோரசான் பிரிவு தெரிவித்துள்ளது. அவர் பெயர் அப்துர் ரஹ்மான் அல்-லோக்ரி என்றும் அந்த பயங்கரவாத அமைப்பின் பிரச்சார இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து வருடத்துக்கு முன் டெல்லியில் தாக்குதல் நடத்த வந்தபோது கைது செய்யப்பட்ட அப்துர் ரஹ்மான், சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டார் என்றும் பிறகு இந்த உயிரிழப்பு தாக்குதலில் ஈடுபட்டார் என்றும் அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.