குற்றம் தமிழகம்

மாணவரை துன்புறுத்தியதாக தலைமை ஆசிரியர் மீது புகார்.

பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவரை, தலைமை ஆசிரியர் அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வஞ்சகரை பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரது மகன் ஜீவா, திருச்சி மேலசிந்தாமணியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி சென்ற மாணவன், உடல்நலக்குறைவு காரணமாக ஆசிரியரிடம் அனுமதி வாங்கி வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும் பள்ளிக்கும் திரும்ப தாமதமானதால் மாணவனை, தலைமை ஆசிரியரும், அலுவலக உதவியாளரும் சேர்ந்து அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து மாணவனை திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர்.

இது குறித்து மாணவனின் பெற்றோர்கள் கூறுகையில் ஆசிரியர்கள் என்பவர்கள் குருவுக்கு சமமானவர்கள் மாணவன் தவறு செய்தால் பெற்றோர்களாகிய எங்களை அழைத்து சொல்லியிருக்க வேண்டும்.இது போல மிருகத்தனமான சித்திரவதை செய்த ஆசிரியர்க்கு தக்க தண்டனை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். இது சம்பந்தமாக கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவு கூறினர்.

பள்ளிகள் திறப்பின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களை பள்ளிக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது என்று கூறியிருந்த நிலையில் தாமதமாக வந்த மாணவனை அடித்து சித்ரவதை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மன உளைச்சலால் நாக்கை அறுத்துக் கொண்ட நபர்

Saravana Kumar

ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த தனியார் ஆலைக்கு சீல்

Gayathri Venkatesan

ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும்: வழக்கு!

Halley karthi