இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு அனில் கும்ப்ளேவை
மீண்டும் நியமிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகி றது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்து வருகிறார். இவரின் பதவிகாலம், டி-20 உலகக் கோப்பை தொடருடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது. புதிய பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவை மீண்டும் நியமிக்கவும் அடுத்த வாய்ப்பாக
வி.வி.எஸ். லட்சுமண் பெயரும் ஆலோசிக்கப்படுகிறது.
அனில் கும்ப்ளே, கடந்த 2016-17 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப்
பயிற்சியாளராக இருந்தார். சச்சின் டெண்டுக்கர், கங்குலி, வி.வி.எஸ் லட்சுமண் தலைமை யிலான ஆலோசனைக் குழு அப்போது கும்ப்ளேவை பயிற்சியாளராக நியமித்தது. ஆனால், கேப்டன் விராத் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பயிற்சியாளர் பதவி யிலிருந்து விலகினார் கும்ப்ளே. அவர் விலகுவதற்கு விராத் கோலியுடன் ஏற்பட்ட மோதல் தான் காரணம் என அப்போது கூறப்பட்டது.
இப்போது இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக சவுரவ் கங்குலி இருப்பதால் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு கும்ப்ளே மீண்டும் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் தெரி விக்கின்றன.
பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, விராத் கோலியின் அழுத்தம் மற்றும் நெருக்கடியால் தான் பயிற்சியாளர் பதவியிலிருந்து கும்ப்ளே விலகினார். இனிமேல் அது முன்னுதாரண மாக இருக்கக் கூடாது. ரவிசாஸ்திரி பதவிக்காலம் முடிந்ததும், கும்ப்ளே அல்லது விவிஎஸ் லட்சுமண் இருவரில் யார் தயாராக இருக்கிறார்களோ அவரிடம் இருந்து விண்ணப்பிக்க கோரப்படும் என்று தெரிவித்தார்.








