வாரிசு திரைப்படம் வெளியாவதில் திடீர் சிக்கல்? -ரசிகர்கள் அதிர்ச்சி

வாரிசு திரைப்படம் வெளிநாடுகளில் வெளியாவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி…

வாரிசு திரைப்படம் வெளிநாடுகளில் வெளியாவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜூ
தயாரித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி
பாபு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக
உள்ளது.


இந்தியாவில் படத்தின் வெளியீட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று
வருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் குறித்த தேதியில் வாரிசு திரைப்படம்
வெளியாகுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. வாரிசு திரைப்படம் முதலில் ஜனவரி
12ம் தேதி தான் வெளியாவதாக இருந்தது. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற
நாடுகளில் 11ம் தேதி சிறப்பு காட்சிகளுக்கான முன்பதிவு செய்யப்பட்டன.
அங்குள்ள ரசிகர்களும் அதே தேதிக்கு டிக்கெட் புக் செய்திருந்தனர். ஆனால்
திடீரென ரிலீஸ் தேதி 11ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதனால் சிறப்பு காட்சிகளை
10ம் தேதியே போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இதனால் அடுத்த நாளுக்கு டிக்கெட் புக் செய்தவர்கள் 10ம் தேதிக்கு மாற்றப்பட
வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதுமட்டுமின்றி வாரிசு படத்தின் வெளிநாட்டு
காப்பிக்கான பணிகளும் இன்னும் முடியவில்லை என்று கூறப்படுகிறது. எனவே வாரிசு
திரைப்படம் திட்டமிட்டபடி வெளிநாடுகளில் குறித்த நாளில் வெளியாகுமா இல்லை சில
தினங்கள் தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் வாரிசு
தெலுங்கு பதிப்பு ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் நிறுவனம் சார்ப்பு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும்
வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் சற்று குழப்பத்தில் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.