ராகுல் காந்தி தான் இந்திய தேசத்திற்கு தலைமை ஏற்க முடியும் என்று கமல்ஹாசன் உறுதியாக நம்புவதாக கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி, கமல்ஹாசன் சந்திப்பு குறித்து வேலூரில் பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியுயின் தலைவர் கே எஸ் அழகிரி கூறியதாவது..
” ராகுல் காந்தி உடனான கமலஹாசனின் சந்திப்பை தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது, உளமாற பாராட்டுகிறது. கமல்ஹாசன் மற்றும் ராகுல் காந்தி சந்திப்பு வரவேற்கக் கூடிய ஒன்று. கமல்ஹாசன் ஒரு தேசிய உணர்வு உடைய தமிழர். சீர்கருத்துக்களை உடையவர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்றைய காலகட்டத்தில் , ராகுல் காந்தி தான் இந்திய தேசத்திற்கு தலைமை ஏற்க முடியும் என்று கமல்ஹாசன் உறுதியாக நம்புகிறார்.அதனுடைய வெளிப்பாடு தான் கமல்ஹாசன் ராகுல் காந்தி சந்திப்பு.” என தெரிவித்தார்.