சென்னை வடபழனி – கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம் – வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை வடபழனி – கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். சென்னை வடபழனியில் இருந்து கோடம்பாக்கம் செல்லக்கூடிய பிரதான சாலையாக இருக்கும் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ்…

சென்னை வடபழனி – கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

சென்னை வடபழனியில் இருந்து கோடம்பாக்கம் செல்லக்கூடிய பிரதான சாலையாக இருக்கும் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் அருகே சாலை நடுவே இன்று காலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது.  போக்குவரத்து மிகுந்த பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளத்தை சுற்றியும் தடுப்புகள் அமைத்து,  வாகனங்களை மாற்றுப் பாதையில் போக்குவரத்து காவல்துறையினர் அனுப்பி வருகின்றனர்.

இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகளும்,  பொதுமக்களும் சிரமம் அடைந்துள்ளனர்.  சென்னையில் பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள இந்தப் பள்ளத்தை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.