வந்தே பாரத் ரயிலில் திடீர் தீ விபத்து..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வந்தே பாரத் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் ரயில் பாதியிலே நிறுத்தப்பட்டது. கோரமண்டல் ரயிலின் கோர விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும்…

மத்திய பிரதேச மாநிலத்தில் வந்தே பாரத் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் ரயில் பாதியிலே நிறுத்தப்பட்டது.

கோரமண்டல் ரயிலின் கோர விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களின் பல உடல்கள் அடையாளம் காணப்பட முடியாத அளவுக்கு சிதைந்து இருந்ததால் பிணவறையிலே வைக்கப்பட்டன.

கோரமண்டல் ரயில் விபத்தை தொடர்ந்து நாடு  முழுக்க ரயில் விபத்து தொடர்பான அடுத்தடுத்த செய்திகள் வரத் தொடங்கின. தினந்தோறும் சிறிய அளவிலான விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று பொதுமக்களை அச்சத்திற்கு உள்ளாக்கின.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் வந்தே பாரத் அதிவிரைவு ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயிலில் உள்ள மின்கலனில் பிரச்னை ஏற்பட்டதால் ஒரே ஒரு பெட்டியில் மட்டும் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் மின்கலனில் ஏற்பட்ட தீ  உடனடியாக அணைக்கப்பட்டது.

ரயிலில் பயணித்த பயணிகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் , யாருக்கும் எந்த காயமும் இல்லை எனவும் ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் மின்கலனில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து மின்கலனில் இருந்து ரயில் பெட்டிகளுக்கு செல்லும் சப்ளை உடனடியாக துண்டிக்கப்பட்டு தீ பரவாமல் தடுக்கப்பட்டுள்ளதாகவும், தீவிர பரிசோதனைக்கு பிறகு மீண்டும் ரயில் இயக்கப்படும் எனவும் ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.