ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் – 4.6 ரிக்டர் அளவாக பதிவு!

ஆப்கானிஸ்தானில் இன்று 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 5.29 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் 150 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலையில் 36.833 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.447 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

கடந்த 6ம் தேதி ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை சார்பில் மனிதாபிமான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.