முக்கியச் செய்திகள் சினிமா

வாரிசு பட பர்ஸ்ட் லுக் சர்ச்சை; ஓட்டோ நிறுவனம் விளக்கம்

விஜயின் வாரிசு படத்தின் first look போஸ்டர் சர்ச்சைக்கு, இது தனித்துவமான ஒன்று, இதற்கும் எங்கள் நிறுவனத்தின் விளம்பரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஓட்டோ நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

தமிழ் சினிமாவின் தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையதளபதி விஜயின் 48வது பிறந்தநாள் ஜூன் 22ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்களால்  கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விஜயின் பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 66 படத்தின் டைட்டிலும் first look-ம் வெளியாகி இணையத்தில் வைரலானது. அந்த படத்திற்கு வாரிசு என்ற டைட்டிலோடு, விஜய் கோர்ட், சூட் அணிந்து ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு first look போஸ்டரும் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனிடையில் விஜயின் வாரிசு படத்தின் first lookம் பிரபல தனியார் நிறுவனமான ஓட்டோ நிறுவனத்தின் விளம்பரத்தை போல இருப்பதாக பலரும் இணையத்தில் கலாய்த்து வந்தனர். இதனிடையில் மீம் கிரியேட்டர் ஒருவர் விஜயின் படத்தில் துல்கர் சல்மான் இருப்பது போன்று போட்டோஷாப் செய்து அதனை இணையத்தில் வெளியிட்டார். இதற்கு ஓட்டோ நிறுவனம் தரப்பில் இது Fake என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

இதுகுறித்து ஓட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஓட்டோவில் நாங்கள் எப்போதும் அசல் தன்மையை உறுதியெடுத்துள்ளோம். அறிவு பூர்வமான விதி மீறல்களை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். வாரிசு படத்தில் விஜயின் first look போஸ்டர் எந்த விதத்திலும் ஓட்டோ நிறுவனத்தின் புகைப்படத்தோடு ஒத்துப்போகவில்லை. அது தனித்துவமான ஒன்று. இது தனிநபர் மீம் கிரியேட்டரால் பொழுது போக்கிற்காக உருவாக்கப்பட்டதாகும். விஜயின் வாரிசு படத்திற்கு எங்கள் தரப்பில் இருந்து முழு ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறோம், என பதிவிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தொலைத்தொடர்பு துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு

Halley Karthik

கைதி உயிரிழந்த விவகாரம்; காவல்துறை விளக்கம்

Arivazhagan CM

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்!

Ezhilarasan