முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

’மதுரையில் கலைஞர் நூலகம் – அறிவுத்தாகம் தீர்க்கும் முதலீடு’: சு.வெங்டேசன் எம்.பி புகழாரம்!

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ரூ.70 கோடியில் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை, சு.வெங்கடேசன் எம்.பி. வரவேற்றுள்ளார்.

திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு பல அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளது. அதில் முக்கிய அறிவிப்பாக சென்னை அண்ணா நினைவு நூலகத்தைப் போல் மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் 70 கோடியில் நவீன வசதிகளுடன் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தை தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், புத்தக வாசிப்பாளர்கள் வரவேற்றுள்ளனர்,

இதனை வரவேற்று டிவிட்டரில் பதிவிட்டுள்ள மதுரை எம்.பி., சு.வெங்கடேசன், இது மதுரைக்கு மற்றுமொரு மகுடம்!

ரூபாய் 70கோடி மதிப்பீட்டில் கலைஞர் நினைவு நூலகம். பல்லாண்டுக் கோரிக்கை நிறைவேறும் மகிழ்வு எனவும், இது செலவன்று ; அறிவுத்தாகம் தீர்க்கும் அருஞ்சுனைக்கான முதலீடு, இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி’ என டிவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement:

Related posts

ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும்: ராஜேந்திர பாலாஜி!

Karthick

புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு எதிராக நடைபெற்ற தர்ணா போராட்டம் ஒத்திவைப்பு; முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு!

Saravana

“அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 405 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்” – அமைச்சர் செங்கோட்டையன்

Jeba