கோவில்பட்டி ரயில் நிலையத்தில். மத்திய ரயில்வே பயணிகள் வசதி குழு
உறுப்பினர்கள் , பயணிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள்
குறித்த ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் , கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு. ரயில்வே
பயணிகள் வசதி குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், மதுசூதனன் மற்றும்
கோட்டெல்லா உமாராணி ஆகியோர் வருகை புரிந்தனர். மேலும் அவர்கள்,
ரயில்வே நிலையத்தில் உள்ள பயணிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள்
குறித்த ஆய்வு செய்தனர். அதோடு, பயணிகளுக்கு என்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன
என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும், பயணிகளின் குடிநீர் , கழிவறை , ஓய்வறைகள், நடைமேடை, இருக்கை
மற்றும் மின்விசிறி போன்ற அடிப்படை வசதிகளை பார்வையிட்டனர் .
– கு.பாலமுருகன்








