30 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

குரங்கு அம்மை குறித்த அச்சம் வேண்டாம்: மத்திய அரசு

குரங்கு அம்மை குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று மத்திய சுகாதரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இது குறித்து விளக்கம் அளித்த அவர், குரங்கு அம்மை நோய் கேரளாவில் கண்டறியப்பட்டதை சுட்டிக்காட்டினார். முதல் நோயாளி அடையாளம் காணப்படுவதற்கு முன்பாகவே குரங்கு அம்மை தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதோடு, கேரளாவில் முதல் நோயாளி அடையாளம் காணப்பட்டதும் மத்திய அரசு நிபுணர் குழுவை அனுப்பி மாநில அரசுக்கு தேவையான உதவிகளை அளிக்கத் தொடங்கியதோடு, தொடர் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.

குரங்கு அம்மை புதிய வகை நோய் அல்ல என்பதையும் அது 1970களில் இருந்தே ஆப்ரிக்காவில் இருந்து வருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட மான்சுக் மாண்டவியா, குரங்கு அம்மை நோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

குரங்கு அம்மை குறித்து அச்சம் கொள்ளக்கூடாது என வலியுறுத்திய அவர், விழிப்புணர்வுடன் இருப்பதன் மூலம் இந்த பிரச்னையை நம்மால் எதிர்கொள்ள முடியும் என்றார்.

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், 12-13 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இதன் மூலம் அது பிறருக்கு தொற்றாமல் தடுக்க முடியும் என்றும் தெரிவித்த மான்சுக் மாண்டவியா, இந்த நோயை கட்டுப்படுத்த நிதி ஆயோக் உறுப்பினரின் தலைமையில் செயல்திட்டக் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குரங்கு அம்மை நோய் வராமல் தடுக்க தடுப்பூசி தயாரிப்பதற்கான பணியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு ஈடுபட்டு வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இதுவரை 5 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading