வடரெங்கம் செல்லும் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் சாலையில் உரசும் அளவிற்கு படியில் தொங்கியவாறு சென்ற வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.
சீர்காழியிலிருந்து கொண்டல் வழியாக வரடெங்கம் கிராமத்திற்கு 2அரசு நகரபேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்தில்தான் கொண்டல், வள்ளுவக்குடி, அகணி, நிம்மேலி, வடரெங்கம் என 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மாணவ, மாணவிகள் பயணம் செய்து வருகின்றனர். இதனால் பேருந்து எப்பொழுதும் கூட்டத்துடன் சென்றுவரும். இதனால் கூடுதலாக பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் வடரெங்கம் சென்ற அரசு பேருந்தில் அதிகளவு மாணவர்கள் படியில் தொங்கியவாறு பயணம் செய்வது போன்றும், பேருந்து ஒருபக்கம் சாய்ந்தவாறு சாலையில் உரசியப்படி மெதுவாக பேருந்து செல்லும் வீடியோ சமூக வளைதளளங்களில் வைரலாகி வருகிறது. ஆகையால் மீண்டும் பள்ளி நேரங்களில் கூடுதலாக பேருந்து இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—அனகா காளமேகன்