கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2 ஏக்கர் பரப்பளவில் கீழடி அருங்காட்சியகம் கட்டி
முடிக்கப்பட்டு கடந்த மார்ச் 5ம் தேதி திறக்கப்பட்டு மக்கள்
பார்வையிட்டு வருகிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து இதுவரை 70
ஆயிரத்துக்கும் மேலான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
இந்நிலையில் கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, நடிகர் சிவக்குமார் ஆகியோர் இன்று பார்வையிட்டனர். சூர்யா,ஜோதிகா, சிவக்குமாருக்கு கீழடி அருங்காட்சியகம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விளக்கினார்.








