சென்னை தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூரில் , 48 நாள் மஹா
வேள்வி தொடங்கியது.
தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூரில் உலக நன்மையை வலியுறுத்தி, அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி அம்பிகைக்கு சிறப்பு தீபாரதனை மற்று பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, உலக நன்மை, செல்வம், புகழ் எல்லாம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டியும் பூஜைகள் நடைபெற்றது.
அதன்படி, 48 நாள் மஹா வெள்வி தொடங்கியது. இந்த பிரமாண்டமான யாகத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இன்று தொடங்கிய இந்த யாகம் ஜூன் மாதம் வரை தொடர்ந்து 48 நாட்களும் பெறுகிறது. தொடர்ந்து, பத்தாயிரத்து எட்டு சக்கர பூஜைகளும் நடைபெற்றது. அதன் பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
—கு.பாலமுருகன்







