நம்மாழ்வார் 85 வது பிறந்தநாளை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை மாவட்டம் , காவிரி ஆற்றில் நம்மாழ்வார் உருவத்தை
இலை , தழைகள் மற்றும் பூக்களால் மணலில் பள்ளி கல்லூரி மாணவர்கள் வரைந்தனர்.
தஞ்சை மாவட்டம், திருவையாறு காவிரி ஆற்றில் இயற்கை வேளாண்
விஞ்ஞானி நம்மாழ்வாரின் 85 வது பிறந்த நாளை முன்னிட்டு, அகில இந்திய
மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம்
மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மாரியப்பன்
துணையோடும் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஓவியத்தை வரைந்தனர்.
மேலும் , இவர்கள் இலை , தழைகள் மற்றும் பூக்களால் மணலில் நம்மாழ்வார்
உருவப்படத்தை வரைந்து, அதில் இயற்கை ஆர்வலர்கள் மாணவர்கள் கலந்து
கொண்டு ‘மரம் வளர்ப்போம் சுற்றுச்சூழலை காப்போம் ’, ‘சிறுதானிய உணவு
வகைகளை உண்போம் ’,‘பாரம்பரிய வேளாண்மையை முன்னெடுப்போம்’
பிளாஷ்டிக்கை அறவே தவிர்ப்போம் என்றும் உறுதிமொழி எடுத்துக்
கொண்டனர்.
–கு.பாலமுருகன்







