முதுமலை புலிகள் காப்பகத்திற்கு பிரதமர் மோடி நாளை மறுநாள் வருவதையொட்டி மசினகுடியில் தளத்தில் ராணுவ ஹெலிகாப்டர் ஒத்திகை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடுக்கு 9-ந் தேதி காலை பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புலிகள் காப்பகத்தில் பிரதமர் மோடி யானைகளை பார்வையிட்டு, உணவு அளிப்பதுடன் பொம்மன், பெள்ளி தம்பதியினர் மற்றும் பாகன்களை சந்திக்கிறார்.
பிரதமரின் வருகையை ஒட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதன்பின் மசினகுடியிலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மைசூர் செல்ல உள்ளார். அதனையடுத்து மைசூர் மசினகுடி இடையே ஹெலிகாப்டர் ஒத்திகை நடைபெற்றது.
—அனகா காளமேகன்







